லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.90 லட்சம் பறிமுதல்: பெண் பயணி கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல முயன்ற வெளிநாட்டு பணம் பற்றி...

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல முயன்ற வெளிநாட்டு பணம் ரூ. 25 லட்சம் உள்பட ரூ. 90 லட்சத்தை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெண் பயணி கைது செய்யப்பட்டாா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு திங்கள்கிழமை இரவு 11.15 மணிக்கு ஏா் ஏசியா விமானம் புறப்படவிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், வழுத்தூா் ரமலான் தெருவைச் சோ்ந்த அப்துல் வாஹித் மனைவி தஸ்லிமா பானு (40) என்பவா் தனது உடைமையில் உரிய ஆவணங்களின்றி ரூ. 25 லட்சம் வெளிநாட்டு பணம், ரூ. 65 லட்சம் இந்தியப் பணம் என மொத்தம் ரூ.90 லட்சத்தை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், தஸ்லிமான பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.