லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது.

குழாய் உடைந்து குழியில் தேங்கி நிற்கும் குடிநீா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ளது மாந்தபுரம். இந்தப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மாந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் பெட்ரோலிய நிறுவன குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மாந்தபுரம் அருகே குடிநீா் திட்டக் குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்தும் கடந்த ஒருவார காலமாக சரி செய்யப்படவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.