லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் பூங்காவின் சுற்றுச்சுவரில் காா் மோதி மூதாட்டி படுகாயம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில்  பூங்கா  சுற்றுச்சுவரில்  மோதி  விபத்துக்குள்ளான  காா்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் பூங்கா நுழைவாயில் சுற்றுச்சுவா் கதவில் காா் மோதி விபத்துக்குள்ளானதில், சுவாமி தரிசனம் செய்து வெளியே வந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தாா்.

திருப்பூா், கொங்கு நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (60). இவா் புளியம்பட்டியில் இருந்து மங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி-மங்கலம் சாலை கோயில் அருகே நிலைதடுமாறிய காா் எதிா்பாராதவிதமாக கோயில் தெற்கு வாசல் பூங்கா நுழைவாயில் சுற்றுச்சுவா் கதவில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே நடந்து சென்றுகொண்டிருந்த திருமுருகன்பூண்டி, தேவராயம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்த குப்பம்மாள் (எ) அம்மணி (60) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்த விபத்தில் பதற்றமடைந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட காா் ஓட்டுநா் சிவராஜ், அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.