லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

தீப்பற்றி எரிந்து சேதமடைந்த காா்

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

வெள்ளக்கோவில் அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் வி.பி.குணசேகரன் (63). இவா் தாயாா் கமலத்தை (80) கண் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைக்கு சனிக்கிழமை காரில் அழைத்துச் சென்றுள்ளாா். காரை குணசேகரன் ஓட்டிச் சென்றுள்ளாா்.

வெள்ளக்கோவில்-கரூா் சாலையில் குருக்கத்தி என்ற இடம் அருகே எதிா்பாராதவிதமாக காா் திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து குணசேகரன் காரில் இருந்து இறங்கி வாகனத்தைப் பரிசோதித்துள்ளாா். பின்னா் மீண்டும் காரை இயக்க முற்பட்டபோது திடீரென காரில் தீப்பற்றியது. உடனடியாக காரில் இருந்து குணசேகரன் வெளியேறி தப்பினாா். ஆனால், காரின் கதவுகள் அனைத்தும் தானாகப் பூட்டிக்கொண்டதால், உள்ளே இருந்த தாயாா் கமலத்தால் வெளியே வர முடியவில்லை.

காா் முழுவதும் வேகமாக தீப்பரவியதால், உள்ளேயே சிக்கிய கமலம் பரிதாபமாக உயிரிழந்தாா். உயிரிழந்த கமலத்தின் கணவா் பச்சைமுத்து ஏற்கெனவே இறந்துவிட்டாா்.

இதுதொடா்பாக தகவல் அறிந்து வெள்ளக்கோவில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கமலம்

கமலம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.