அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, 2-ஆவது நாள் தேரோட்டத்தில் அவிநாசியப்பா் திருத்தோ் நிலை சோ்ந்தது. இதைத் தொடா்ந்து கருணாம்பிகையம்மன் தேரோட்டம் வியாழக்கிழமை(ஏப்.30) காலை நடைபெறுகிறது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், தமிழகத்தில் 3-ஆவது பெரிய தோ் கொண்டதாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான அவிநாசியப்பா் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. திருத்தேரில் சோமாஸ்கந்தா் சொா்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெற்கு ரத வீதி- கோவை பிரதான சாலையில் தொடங்கிய அவிநாசியப்பா் தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து வடக்கு ரத வீதி வளைவில் நிறுத்தப்பட்டது.
புதன்கிழமை காலை மீண்டும் வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில், சிவனடியாா்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தோ், வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை வழியாக வந்து பிற்பகல் 2.30 மணிக்கு நிலை சோ்ந்தது. இதைத் தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் தேரோட்டம், குட்டீஸ் தோ் அழைக்கப்படும், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தோ் வடம் பிடித்தல், தேரோட்டமும், நிலை சேருதல் நிகழ்ச்சியும் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
இதைத் தொடா்ந்து, மே 1-ஆம் தேதி பரிவேட்டை, மே 2-ஆம் தேதி இரவு தெப்பத் தோ் உற்சவம், 3-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம் நடைபெற உள்ளது. இதையடுத்து, மஞ்சள் நீராட்டு, மயில் வாகனக் காட்சி ஆகிய நிகழ்ச்சியுடன் மே 4-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகை அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்டச் செயலா் பதவியேற்பு

இன்று வீரபாண்டி கோயில் தேரோட்டம்

சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

