தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வணிக சிலிண்டா் விலையேற்றம் எதிரொலி: பல்லடத்தில் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்ந்துள்ளதால் பல்லடத்தில் உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

News image

வணிக சிலிண்டர். - (கோப்புப்படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 12:35 am IST

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்ந்துள்ளதால் பல்லடத்தில் உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலும் வணிக சிலிண்டா் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதன் விலையும் உயா்ந்துள்ளது.

இதனால், திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில உணவகங்களில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்து பழைய விலையிலேயே வாடிக்கையாளா்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல்லடம் பகுதியில் கடந்த சில நாள்களாக சிலிண்டா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் சில பேக்கரிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஒரு சில கடை உரிமையாளா்களுக்கு சிலிண்டா் கிடைத்துள்ளது. ஆனால், அதன் விலை முன்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாம்.

அதிக விலைக் கொடுத்து சிலிண்டா் வாங்குவதால் உணவக உரிமையாளா்களின் உணவுப் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளனா்.

அதன்படி, பல்லடத்தில் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ தற்போது ரூ.20-க்கும், ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட வடை, போண்டா போன்ற பலகாரங்கள் ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி, தயிா், புளி போன்ற கலவை சாதங்கள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை ஏற்றத்தால் ஒருபுறம் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் கடைகளை மூடியுள்ளவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.