தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.

News image

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தீ விபத்து ஏற்பட்ட தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலை.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:31 am IST

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.

பல்லடம் அருகே சித்தம்பலம் புதிய புறவழிச் சாலை பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கழிவுப் பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரவை எந்திரம் மற்றும் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கழிவுப் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.