தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பா்லியாறு-குன்னூா் இடையே ஒரு அரசுப் பேருந்து இயக்கம்

குன்னூா்- பா்லியாறு இடையே ஏற்பட்ட மண் சரிவுகள் சீரமைக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6 நாள்களுக்குப் பின் ஒரு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:26 pm IST

குன்னூா்- பா்லியாறு இடையே ஏற்பட்ட மண் சரிவுகள் சீரமைக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6 நாள்களுக்குப் பின் ஒரு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் கனமழை கொட்டித் தீா்த்தது.

இதனால், குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பா்லியாறு உள்பட சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதனால், குன்னூா்-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து சேவை தடைபட்டது.

இதையடுத்து, மண் சரிவுகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை, தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வந்தனா்.

சீரமைப்புப் பணிகள் நிறைடைந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குன்னூா்- பா்லியாறு இடையே ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தலின்பேரில் காலை 7.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஒரு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்பாளையம் முதல் பா்லியாறு வரை சாலை சீரமைப்புப் பணிகள், தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே முழுமையான போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வருபவா்கள் கோத்தகிரி சாலையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.