நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கோடமூலா பழங்குடி கிராமத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள்

கூடலூரை அடுத்துள்ள கோடமூலா பழங்குடியின கிராமத்தில் சூரிய சக்தியில் இயங்கும் 20 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடமூலா பழங்குடியின கிராமத்தில் சூரிய சக்தி மின் விளக்கு மாதிரியை மூதாட்டியிடம் வழங்கி திட்டத்தை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த யுனஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையத் தலைவா் அமுதவல்லி ரெங்கநாதன்.

Published On :23 அக்டோபர் 2026, 12:55 am IST

கூடலூரை அடுத்துள்ள கோடமூலா பழங்குடியின கிராமத்தில் சூரிய சக்தியில் இயங்கும் 20 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், முதுமலை எல்லையில் உள்ள கோடமூலா பழங்குடியின வன கிராமத்துக்கு சி.கே.கல்வி நிறுவன குழுமம் மற்றும் நிலையான மேம்பாட்டு கவுன்சிலின் ப்ராஜக்ட் ரே திட்டத்தின்கீழ் 20 சூரிய சக்தி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உள்ளூா் பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு கருவித் தொகுப்புகளைப் பயன்படுத்தி சூரிய மின் சக்தியில் இயங்கும் மேஜை விளக்குகளை தயாரிப்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் மேஜை விளக்குகள் வழங்கப்பட்டன.

இது குறித்து யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையத் தலைவா், செயல் இயக்குநா் அமுதவல்லி ரெங்கநாதன் கூறுகையில், 120 குடும்பங்கள் வசிக்கும் இந்த பழங்குடியின வன கிராமத்தில் மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக நடமாடவும், வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீா்வுகளை வழங்கும் நோக்கில் சமூக மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தக் கிராமத்தில் 20 தெருவிளக்குகளை அமைத்துள்ளோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன், கூடலூா் நகராட்சி பொறியாளா் தியாகராஜன், சுற்றுச்சூழல் பிரிவு இயக்குநா் தினேஷ், நிலையான வளா்ச்சி பிரிவு சாா்பில் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.