மசினகுடி அருகே யானை உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டம், சிக்கோலை ஆற்றுப் பகுதியில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு அழுகிய நிலையில் யானையின் உடல் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் உயா் அதிகாரிகள், வன கால்நடை மருத்துவா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினா் யானையின் உடலை ஆய்வு செய்தனா். இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னா் அங்கேயே புதைக்கப்பட்டது.
உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவா் கைது
1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது

திருவானைக்காவல் கோயில் யானையின் பிறந்தநாள் விழா! அமைச்சா் பங்கேற்பு

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட யானை உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

