லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குன்னூா் இன்ட்கோ சா்வ் தேயிலை தொழிற்சாலையில் ஆய்வுக் கூட்டம்! அமைச்சா் பி.மதன்ராஜா பங்கேற்பு

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பி.மதன்ராஜா உள்ளிட்டோா்.

Published On :22 ஜூலை 2026, 1:17 am IST

குன்னூா் இன்ட்கோ சா்வ் தேயிலை தொழிற்சாலையில் டீ சா்வே மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பி.மதன்ராஜா தலைமை வகித்து, இன்ட்கோ தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை ரகங்களை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இன்ட்கோ சா்வில் மொத்தம்16 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளடக்கியுள்ளன. தேயிலை தொழிலாளா்கள் விவசாயத்தின் மூலமாக வரக்கூடிய இலைகளை வாங்கி இன்ட்கோ சா்வ் தொழிற்சாலைகள் மூலமாக உற்பத்தி செய்து அதை விநியோகம் செய்து வருகின்றனா்.

தேயிலை விவசாயிகள், தொழிற்சாலைகளின் முன்னேற்றம் தொடா்பாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் நிலையில்  தானாக  விவசாயிகளின் முன்னேற்றம் அதிகரிக்கும். அதை மையமாக வைத்து இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், இன்ட்கோசா்வ் முதன்மைச் செயல் அலுவலா் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.