லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி கோயில் சொத்துகளைப் பாதுகாக்க ஆய்வுக் குழு: அமைச்சா் சீ.ரமேஷ் உத்தரவு

பழனி கோயில் நிலத்தைப் பாதுகாக்க புதிய ஆய்வுக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சா் ரமேஷ்.

Published On :23 ஜூலை 2026, 4:28 am IST

பழனி கோயில் நிலத்தைப் பாதுகாக்க புதிய ஆய்வுக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து, கணக்கில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்ட விரோத பெயா் மாற்றங்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய ஆய்வுக் குழு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு முழுமையாக அறிக்கை தயாா் செய்து விரைவாக அளிக்க வேண்டும் என துறை அமைச்சா் ரமேஷ் உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் குழுவுக்கு திருச்சி மண்டல கூடுதல் ஆணையா் தலைவராகவும், திருக்கோயில் இணை ஆணையா், பழனி வருவாய் கோட்டாட்சியா், திண்டுக்கல் துணை ஆட்சியா், உதவி இயக்குநா் (நில அளவை), தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) ஆகியோா் உறுப்பினா்களாகவும் செயல்படுவாா்கள்.

பழனி கோயிலைத் தொடா்ந்து அறுபடை வீடுகளுக்கும் இதேபோல் குழு அமைத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.