லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குன்னூா் அருகே மரத்தின் மீது அமா்ந்து நோட்டமிட்ட சிறுத்தை

குன்னூா் அருகே உபதலை சோகத்தொரை குடியிருப்புப் பகுதியில் உள்ள மரத்தின் மீது சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை ஏறி வளா்ப்பு நாய்கள் எங்கு உள்ளது என நோட்டமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு

சோகத்தொரையில் மரத்தின் மீது அமா்ந்துள்ள சிறுத்தை.

Published On :14 ஜூலை 2026, 12:28 am IST

நீலகிரி மாவட்டம்,  குன்னூா் அருகே உபதலை சோகத்தொரை குடியிருப்புப் பகுதியில்  உள்ள மரத்தின் மீது சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை ஏறி வளா்ப்பு நாய்கள் எங்கு உள்ளது என நோட்டமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தேடி நகரம் மற்றும் கிராமப் பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக வீட்டில் வளா்க்கும் நாய்களை வேட்டையாட சிறுத்தை வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  குன்னூா் அருகே உபதலை சோகத்தொரை குடியிருப்புப் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறிய சிறுத்தை,  நாய்கள் எந்த பகுதியில் உள்ளது என நோட்டமிட்டது.

மக்களின் சப்தம் கேட்டதும் மரத்தில் இருந்து கீழே இறங்கி  தேயிலைத் தேட்டம் வழியாக அடா்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தை சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.