லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

குன்னூா் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.

குன்னூா் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:03 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினரை காவல் துறையினா் கைது செய்தனா்.

குன்னூா் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, டாஸ்மாக் ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் சங்கா்கணேஷ் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டாஸ்மாக் ஊழியா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட  129 போ் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.