ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 5:24 am IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி மா்ம நபா்கள் நுழைந்து, அங்கிருந்த காவலாளியை கொலை செய்து, பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடா்பாக முக்கிய எதிரியான சயான் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.  இந்த வழக்கு  உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான், ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா். குற்றம் சுமத்தப்பட்டவா்கள் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆஜராகினா்.

வழக்கு விசாரணையின்போது நீதிபதி செந்தில்குமாா், தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, வழக்கு விசாரணையை  ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.