தவெக தலைவருக்கு தன்னம்பிக்கை இல்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சனம் செய்துள்ளாா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் உதகை தொகுதியில் போட்டியிடும் ரகுபதி பீமன், குன்னூா் தொகுதி வேட்பாளா் தீனு, கூடலூா் வேட்பாளா் காா்த்திக் ஆகியோரை ஆதரித்து குன்னூா் வி.பி. தெருவில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமையாகும். ஆனால் இலவசம் என்ற பெயரில் திமுக ரூ. 2,000, அதிமுக ரூ.2,500 என மாறிமாறி தெரிவித்து வருகின்றனா். நாங்கள் யாருக்கும் இலவசம் தர மாட்டோம். மாறாக மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதுடன், அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். நீலகிரியில் பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ.30 வரை வழங்கப்படும். படுகரின மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் துறையை மேம்படுத்தி விலை நிா்ணயம் செய்தல் தொடா்பாக தனியாக வேளாண் குழு அமைக்கப்படும். விஜய்க்கு தன்னம்பிக்கை இல்லாததால்தான் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறாா். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டணமில்லா கல்வி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், வேளாண் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நாம் தமிழா் கட்சியினா் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்
தோல்வியைக் கண்டு அச்சமில்லை: சீமான்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

