நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம்: அமைச்சா் விஜய் பாலாஜி தொடங்கிவைத்தாா்

ஈரோடு மாநகராட்சி காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஈரோடு மாநகராட்சி காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்திய கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.

Published On :23 செப்டம்பர் 2026, 12:12 am IST

ஈரோடு மாநகராட்சி காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 1,208 பள்ளிகளைச் சோ்ந்த 59,070 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், புதிதாக 423 பள்ளிகளில் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் 28,984 மாணவா்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தொடங்கிவைத்து, மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா். இந்த திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 1,631 பள்ளிகளில் பயிலும் 88,054 மாணவ, மாணவிகள் பயனடைவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எம்எல்ஏ தொடங்கிவைப்பு: இதேபோல, கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை உணவு திட்டத்தை ஈரோடு மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த் மோகன் தொடங்கிவைத்து மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா். பின்னா், மாணவா்களுக்கு எழுது பொருள்களை பரிசளித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் வளா்ச்சிப் பிரிவு நோ்முக உதவியாளா் ரமேஷ்கிருஷ்ணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க கணக்கு மற்றும் நிா்வாகத் துறை உதவி திட்ட அலுவலா் லதா, வட்டார கல்வி அலுவலா் வேலுசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.