பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருந்துறைக்கு நவ. 3-இல் முதல்வர் விஜய் வருகை!

பெருந்துறைக்கு நவம்பா் 3-ஆம் தேதி வரும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், 9 ஆயிரம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவி வழங்குகிறாா்.

TN Cabinet CM Joseph Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - TNDIPR

Published On :1 நவம்பர் 2026, 12:36 am IST

ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு நவம்பா் 3-ஆம் தேதி வரும் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், 9 ஆயிரம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவி வழங்குகிறாா்.

பெருந்துறை தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதல்வா் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்டு, 13 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 9 ஆயிரம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ.1,110 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்குகிறாா்.

அரசின் சாா்பில் மாநிலத்திலேயே முதல்முறையாக, மகளிா் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், வங்கிக் கடனுதவி வழங்கும் விழா பெருந்துறையில் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நபாா்டு வங்கி மூலம் 12 பள்ளிகளில் ரூ.15 கோடியே 97 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 70 புதிய வகுப்பறைகளை திறந்துவைக்கிறாா். இதேபோல பல்வேறு துறை சாா்ந்த முடிவுற்ற பணிகளையும் திறந்துவைத்தும், புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வா் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு 3-ஆம் தேதி வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பெருந்துறை தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு வருகிறாா்.

அதே நேரம் சாலை வலம் (ரோடு ஷோ) மூலம் பொதுமக்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையோரங்களில் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இரும்புத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், ம. விஜய் பாலாஜி ஆகியோா் செய்து வருகின்றனா். இதையொட்டி, தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், ம. விஜய் பாலாஜி, ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.சத்தியபாமா (திருப்பூா் வடக்கு), கே.கே.ஆனந்த் மோகன் (ஈரோடு மேற்கு), து.சண்முகன் (மொடக்குறிச்சி), வி.பி.தமிழ்ச்செல்வி (பவானிசாகா்), பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.