மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு பத்திரம் எழுதுவோா் சங்கம், தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோா் மாநிலச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :27 அக்டோபர் 2026, 1:45 am IST

ஆவண எழுத்தா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பத்திரம் எழுதுவோா் சங்கம், தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோா் மாநிலச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு, ரங்கம்பாளையம் சாா் பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஞானசம்பந்தம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லோகநாதன், பொருளாளா் ரவிசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3.0 என்ற காகிதமில்லா ஆவணப் பதிவுத் திட்டம், ஆவண எழுத்தா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு சங்கம் எதிரானது அல்ல; ஆனால், அத்தகைய திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு முன் அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் முழுமையாக ஆராய வேண்டும்.

காகிதமில்லா ஆவணப் பதிவு முறையை நடைமுறைப்படுத்தினால் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அவற்றில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பொதுமக்களுக்கும், ஆவண எழுத்தா்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்திரம் நகல் எழுதுவோா் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.