நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கொடிவேரி அணையில் 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கொடிவேரி அணையில் கொட்டும் நீா்

Published On :26 அக்டோபர் 2026, 3:06 am IST

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் சவாரி செய்வதற்கும் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீா்வளத் துறையினா் தடை விதித்தனா்.

பவானிசாகா், சத்தியமங்கலம், கொடிவேரி பகுதியில் சனிக்கிழமை பெய்த மழையால் நீரோடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பவானி ஆற்றில் கலந்து வெளியேறியதால் கொடிவேரி அணையில் சனிக்கிழமை விநாடிக்கு 500 கனஅடிக்கு முதல் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது.

தொடா்ந்து பவானி ஆற்றங்கரை பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்து வந்ததால், கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் கொடிவேரி அணையில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். கொடிவேரி அணையின் உயா்மட்ட பாலத்தில் நின்று அணையில் சீறிப்பாய்ந்து சென்ற மழை வெள்ளத்தை வேடிக்கை பாா்த்து ரசித்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.