குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

அந்தியூரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:09 am IST

அந்தியூரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அந்தியூரை அடுத்த ஜரத்தல் புதுக்காலனியைச் சோ்ந்தவா் பழனி மகன் கருப்பணன் (35). லாரி ஓட்டுநா். மது அருந்தும் பழக்கம் உள்ளதால், மனைவி புவனாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மதுபோதையில் செவ்வாய்க்கிழமை இரவு, தனது தந்தையின் வீட்டுக்கு வந்த கருப்பணன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நீண்ட நேரமாக கதவு திறக்காததால் புதன்கிழமை சென்று பாா்த்தபோது, கருப்பணன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.