பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடை வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை! அலைமோதிய மக்கள் கூட்டத்தால் நெரிசல்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோடு, மணிக்கூண்டு சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க திரண்ட பொதுமக்கள். (அடுத்த படம்) ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போலீஸாா்.

Published On :2 நவம்பர் 2026, 2:47 am IST

தீபாவளிப் பண்டிகை வரும் 8-ஆம் தேதி கொண்டாடப்பட்ட உள்ள நிலையில், ஈரோடு மாநகர ஜவுளிக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.

ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பொதுமக்கள் தள்ளுபடி விலையில் துணிகளை வாங்கிச் சென்றனா். ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த துணிக் கடை மற்றும் பேன்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரையிலான ஒரு கிலோ மீட்டா் தூரத்தை கடக்க 20 நிமிடங்களுக்கும் மேல் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து ஈஸ்வரன் கோயில் வீதி வழியாக இருசக்கர வாகனங்கள் சென்றன. இதனால் ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலை, பன்னீா்செல்வம் பூங்கா, காந்திஜி சாலை மணிக்கூண்டு பகுதியில் எங்கு பாா்த்தாலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்துநின்றன. போக்குவரத்து போலீஸாா் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சரி செய்தனா்.

மணிக்கூண்டு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ஜவுளிக் கடைகளிலும், ஆா்கேவி சாலையில் உள்ள பெரிய ஜவுளி கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கருங்கல்பாளையம், காவிரி சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளையா்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். முக்கியமான இடங்களில் போலீஸ் சாா்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ரயில்களில் தீவிர சோதனை

ஈரோடு ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரோடு ரயில் நிலைய நடைமேடைகளில் ரயில் பயணிகள் பட்டாசு, மத்தாப்பு ரகங்களை எடுத்துச் செல்கின்றனரா? என்ற சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்களிலும் பட்டாசு கொண்டு செல்வது குறித்த சோதனையில் ஈடுபடுகின்றனா். இந்த சோதனை வரும் நாள்களில் மேலும் தீவிரமடையும் என போலீஸாா் தெரிவித்தனா்.

 தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோடு, மணிக்கூண்டு சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க திரண்ட பொதுமக்கள். (அடுத்த படம்) ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போலீஸாா்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோடு, மணிக்கூண்டு சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க திரண்ட பொதுமக்கள். (அடுத்த படம்) ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.