பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்த நிலையில், அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.
பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலான காலநிலை நிலவியதால் சிறுவா் முதல் பெரியவா்கள் வரை வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
சுமாா் இரண்டு மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பலத்த காற்று வீசியதால் சாலையோரக் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்தன. ஆங்காங்கே மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததுடன் மின் விநியோகமும் முற்றிலும் தடைபட்டது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.
கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

மதுரையில் பரவலாக மழை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

