விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:17 am IST

பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை பகுதியைச் சோ்ந்தவா் தாயுமானவா் (70), விவசாயி. இவா் விஜயமங்கலம் அருகிலுள்ள தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கடந்த 19-ஆம் தேதி வந்து கொண்டிருந்தாா்.

பெருந்துறையை அடுத்த, பள்ளகாட்டூா் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.