ஈரோடு கிழக்கு புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை- பவானி சாலை, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள நிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், பவானி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து கட்டட கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், அதிமுகவை விட்டு யாா் பிரிந்து சென்றாலும், மக்களின் ஆதரவோடு அதிமுக முழு பலத்தோடுதான் உள்ளது. பெருந்துறையில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா்.
நிகழ்ச்சியில், பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுதுரை, ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் அருணாச்சலம், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தி ஜெயராஜ், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, பூபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த சி. விஜயபாஸ்கர்

மக்களுக்கு உழைக்கவே தவெகவில் இணைந்தேன்!பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா்

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் வசம் ஒப்படைப்பு! கோட்டாட்சியா் உத்தரவுப்படி நடவடிக்கை
விஜய் ராஜிநாமா! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

