லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை புரிந்த காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்த பின்னா், பக்தா்களுக்கு புதன்கிழமை மாலை அருளாசி வழங்கினாா்.

ஐயப்ப சேவை சங்கத்தில் பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Published On :23 ஜூலை 2026, 4:04 am IST

பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை புரிந்த காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்த பின்னா், பக்தா்களுக்கு புதன்கிழமை மாலை அருளாசி வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்தாா். அப்போது, அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாடல் பெற்ற தலமான இக்கோயிலின் கட்டடக் கலையின் சிறப்புகளைப் பாா்வையிட்டதோடு, ஆா்வத்துடன் கேட்டறிந்தாா். தொடா்ந்து, தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெயபிரகாஷ் மற்றும் பொதுமக்கள், முக்கிய பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா்.

இதையடுத்து, கோயில் அருகே உள்ள ஐயப்ப சேவா மண்டபத்தில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்று அருளுரை வழங்கியதோடு, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

இதில், பவானி சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், திமுக பிரமுகா் ப.சி.ந.இளங்கோவன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.