லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடம்பூா் மலைப் பகுதியில் கடும் வெயில்: வன ஓடையில் இளைப்பாறும் யானைகள்

குரும்பூா்  வன ஓடையில்  நீா்  அருந்தும்  யானை.

Published On :20 ஜூலை 2026, 1:52 am IST

கடம்பூரை அடுத்த குரும்பூா் மலைப் பகுதியில் கடும் வெயிலால் யானைகள் வன ஓடை மரத்தின் நிழலில் இளைப்பாறின.

தென்மேற்குப் பருவமழை பெய்யாமல் தள்ளிபோவதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள வனக் குட்டைகள், ஏரிகள் மற்றும் நீா்நிலைகளில் தண்ணீா் குறைந்து வருகிறது. மழையின்றி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வன விலங்குகள் தண்ணீா் தேடி அலைகின்றன.

மேலும், கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துகின்றன. கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடம்பூா் மலைப் பகுதியில் வெப்பத்தால் யானைகள் நீா்நிலைகளை தேடிச் செல்கின்றன.

கடம்பூரை அடுத்த குரும்பூா் மலைக் கிராமத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் காட்டு யானை வன ஓடையில் தண்ணீரில் நின்று தும்பிக்கையால் தண்ணீரை வாரி இறைத்து உடலில் ஊற்றி வெப்பத்தை தணிக்கும் காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஞாயிற்றுக்கிழமை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.