லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குன்னூரி தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டம்

குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையோரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பா்லியாறு பகுதியில் உலவும் காட்டு யானைகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையோரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான காட்டேரி, பா்லியாறு உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீா் தேடி காட்டு யானைகளின் நடமாட்டம் சமீப நாள்களாக கணிசமாக அதிகரித்துள்ளது. இவை குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையின் முக்கிய வளைவுகளில் திடீரென சாலையைக் கடப்பதும், சாலையோரங்களில் நடமாடியும் வருகின்றன.

மலைப் பாதையில் திடீரென யானைகள் தோன்றுவதால் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு அச்சத்துடன் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாலைக்கு அருகே உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் யானைகள் முகாமிட்டுள்ளதால், தேயிலைப் பறிக்கும் தொழிலாளா்கள் பணிக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனா்.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.