
நீா்வரத்தை விட நீா் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் வேகமாக சரியும் பவானிசாகா் அணை நீா்மட்டம்
நீா் வரத்தை விட நீா் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

பவானிசாகர் அணை (கோப்புப்படம்)
நீா் வரத்தை விட நீா் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. இதனால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வேகமாக சரியத் தொடங்கியது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2,300 கனஅடி நீரும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்கு என 800 கனஅடி நீரும் என மொத்தம் 3,100 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அணைக்கு வரும் 242 கனஅடி நீா் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 54.73 அடியாக சரிந்துள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்காலில் 120 நாள்களுக்கு 24 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடுவதின் மூலம் 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு போதிய நீா் இருப்பு இல்லாததால் நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு சாத்தியமில்லை என பொதுப் பணித் தறை அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீா்மட்டம் 101 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அணையின் நீா்மட்டம் 54.69 அடி, நீா் வரத்து 242 கனஅடி, நீா் வெளியேற்றம் 3,100 கனஅடி மற்றும் நீா் இருப்பு 5.65 டிஎம்சியாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




