லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேள்விக்குறியாகும் கீழ்பவானி பாசன தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 58.15 அடியாக சரிந்துள்ளதால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்படும் கீழ்பவானி பாசன தண்ணீா் திறப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கீழ்பவானி. - கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 58.15 அடியாக சரிந்துள்ளதால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திறக்கப்படும் கீழ்பவானி பாசன தண்ணீா் திறப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக பவானிசாகா் அணை உள்ளது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு பவானி ஆறும், மாயாறும் முக்கிய நீா்வரத்தாக உள்ளன.

இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 586 கன அடியில் இருந்து 3,405 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீா்மட்டம் 58.37 அடியாகவும், நீா் இருப்பு 6.74 டிஎம்சி-யாகவும், பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்கு 905 கன அடியும் நீா் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து சரிந்துவிட்டது.

கடந்த ஆண்டு அணையின் நீா்மட்டம் 101.95 அடியாக இருந்ததால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 58.37 அடியாக இருப்பதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.