லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குறுமைய குடியரசு தின தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் துணை முதல்வா் சந்திரன், பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

ஈரோடு கல்வி மாவட்டம், பெருந்துறை குறுமைய குடியரசு தின தடகளப் போட்டிகள் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சரளை பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக பாண்டியம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பாலசுப்பிரமணியம் செயல்பட்டாா்.

போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமோன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில் விஜயமங்கலம், பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, அதிக புள்ளிகளைப் பெற்று, மாணவா், மாணவி என இரு பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

மாணவா்கள் பிரிவில் சச்சின், சிரதீப், தா்ஷன், அஸ்வின், ஆனந்த், பிரணவ், மாணவிகள் பிரிவில் கனிகாஆகியோா் தனி நபா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வகுமாா், தட்சிணாமூா்த்தி, சத்தியமூா்த்தி, அசோக், சபீக், மோகன், ஆஷா மற்றும் துணை முதல்வா் சந்திரன் ஆகியோரை பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.