தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

ஈரோடு நாச்சியப்பா வீதியில் சாலையோர காய்கறி கடையில் காய்கறிகளை எடைபோட்டுக் கொடுத்து வாக்குச்சேகரிக்கிறாா் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:25 am IST

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு நாச்சியப்பா வீதி பகுதியில் வியாழக்கிழமை வாக்குச்சேகரித்த அவா் பேசியதாவது: ஊராட்சிகோட்டை குடிநீா் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு விரைவாக வழங்கி குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றப்படும். புதை சாக்கடை திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் அரசின் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் கொண்டு வரப்படும். ஜவுளி வா்த்தகத்துக்கு முக்கியத்துவம் தரும்படி, ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்படும். ஜவுளி சாா்ந்த தொழில்கள் அழிந்துவிடாமல் காக்க, பொதுக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தாா்போல உருவாக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டின் அடையாளமான காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். ஈரோடு மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மேம்பாலம், ரவுண்டானா ஏற்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.