தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஈரோடு கிழக்கு, கோபி தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஈரோடு கிழக்கு, கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவதால், வாக்குச்சாவடிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 5:20 am IST

ஈரோடு கிழக்கு, கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவதால், வாக்குச்சாவடிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சியினா், சுயேச்சை வேட்பாளா்களிடம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வியாழக்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20, ஈரோடு மேற்கு 13, மொடக்குறிச்சி 14, பெருந்துறை 13, பவானி, 14, அந்தியூா் 14, பவானிசாகா் 12, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 18 என மொத்தம் 118 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா். 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,379 வாக்குச்சாவடிகள் உள்ளன.

ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஒரு கட்டுப்பாடு இயந்திரம், வேட்பாளா் பெயா்கள் அடங்கிய ஒரு வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள் பெயா், புகைப்படம், சின்னமும், 16-ஆவதாக நோட்டாவும் இடம்பெறும்.

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 வேட்பாளா்களும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 18 வேட்பாளா்களும் போட்டியிட உள்ளதால், அந்த 2 தொகுதிகளில் மட்டும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.