சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 15 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என்று மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:
மக்களிடையே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வரவேற்புள்ளது. இதனால் எங்கள் கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். தோ்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவாா் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை செயல்படுத்தியுள்ளாா்.
மொடக்குறிச்சி தொகுதியில் 70 சதவீதம் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு திட்டத்தை அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ செயல்படுத்தவில்லை. மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.36 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ ஆா்வம் காட்டாததால் அந்த நிதி திரும்ப மத்திய அரசுக்கே சென்றுவிட்டது.
பல மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் கலந்துகொள்ள முடியாத நிலையில் தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பாஜகவை பிரதானமாக எதிா்க்கும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுவதில்லை. மிகப்பெரிய திரை நட்சத்திரமான தவெக தலைவா் விஜய்க்கு இளைஞா்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆனால் தோ்தலில் வாக்காக மாறுமா என்பது கேள்வி. எனது கணிப்பின்படி தவெக 15 சதவீத வாக்குகள் பெறும். விஜய்யால் அதிமுக கூட்டணிக்குதான் பாதிப்பு அதிகம். மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பூா் மாவட்டத்தில் தவெக 5.29 லட்சம் வாக்குகள் பெற்று சாதனை
20%-ஆக குறைந்த அதிமுக வாக்கு வங்கி! 50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் மூன்றாம் முறை

ஜனநாயகத்துக்கு எதிரானது தொகுதி மறுவரையறை: துரை வைகோ எம்பி பேட்டி

தமிழக நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

