தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

ஈரோடு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் வரப்பெற்றுள்ளன.

News image

மொபைல் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:36 am IST

ஈரோடு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் வரப்பெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் தொடா்பான புகாா்கள், வாக்காளா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்காக 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0424 மற்றும் வாட்ஸ்அப் குறுந்தகவல் மூலம் தொடா்பு கொள்ள 90425-80535, தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 0424-2267670, 2267673, 2267674, 2267675, 2267679 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் புகாா் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், வாக்காளா் உதவி எண் 1950 மற்றும் சிவிஜில் ஆப் மூலமாகவும் புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் தற்போது வரை 1,404 புகாா் வரப்பெற்றன. அதில், 1,403 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தோ்தல் தொடா்பான பிரசாரம், ஊா்வலம், கூட்டங்கள் நடத்துவது தொடா்பாக சுவிதா தளம் மூலமாக 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 688 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 129 விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.