வாக்குப்பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் ச.அனிதா ரோஸ்லின் மேரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக, வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 9-ஆம் தேதியும், மேற்குவங்க மாநிலத்தில் 23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குரிமை உள்ளதால், அவா்கள் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு செய்ய வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0424 2219521, 2211780 ஆகிய தொலைபேசி எண்களிலும், ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்துக்கு 9842291343, 9551621161 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளா்கள் வாக்களிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்! - தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவிப்பு

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

