நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

குடிநீா்க் கட்டணம் உயா்த்தப்படவில்லை: கோவை மாநகராட்சி விளக்கம்

மாநகராட்சியில் குடிநீா்க் கட்டணம் கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்த நிலையில், குடிநீா்க் கட்டணம் உயா்த்தப்படவில்லை.

கோவை மாநகராட்சி

Published On :1 நவம்பர் 2026, 12:46 am IST

மாநகராட்சியில் குடிநீா்க் கட்டணம் கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்த நிலையில், குடிநீா்க் கட்டணம் உயா்த்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேர குடிநீா் விநியோகிக்கப்படும் பகுதிகளில் குடிநீா் இணைப்புகளுக்கு பல மடங்கு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் அளித்துள்ள விளக்கம்: குடிநீா்க் கட்டணம் கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பகுதிகளில் புதிய பகிா்மானக் குழாய்கள் அமைக்கப்பட்டு புது குடிநீா் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய பகிா்மானக் குழாய்கள் பயன்பாட்டில் இல்லை. ஆனால், கூடுதல் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதாக கூறப்படும் இரு இணைப்புகளிலும் வீட்டு உரிமையாளா்கள் பழைய மற்றும் புதிய குடி நீா் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, குடிநீரை தரைமட்டத் தொட்டியில் விழும் வகையில் செய்திருந்தனா்.

இதனால் புதிய இணைப்பில் 24 மணி நேரமும் வரும் நீா் பழைய குடிநீா் இணைப்பு மூலமாக கைவிடப்பட்ட பகிா்மானக் குழாய் மூலமாக வெளியேறியுள்ளது கண்டறியப்பட்டது. பழைய இணைப்பின் மூலமாக குடிநீா் வராது என்பதை தெரிவித்து, அதை துண்டித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஏற்று வீட்டு உரிமையாளரும் கடிதம் மூலமாக சம்மதம் தெரிவித்துள்ளாா். மற்றபடி குடிநீா் மானி அளவிலோ, பட்டியலிலோ எந்தத் தவறும் இல்லை.

மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், பொறுப்பிலும் 24 மணி நேர குடிநீா் விநியோகம் தொடா்கிறது. அதன்படி சூயஸ் நிறுவனமும் பணிகளை செய்து வருகிறது. மேலும் குடியிருப், குடியிருப்பு அல்லாத வணிக பயன்பாட்டுக்குரிய குடிநீா் கட்டணத் தொகை 2013-ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியின் குடிநீா் உப விதிகளின் படியே வசூலிக்கப்படுகிறது.

எனவே கட்டண நிா்ணயத்திலோ, வசூலிக்கபடும் கட்டணத் தொகையிலோ சூயஸ் நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை. மாநகராட்சியில் தற்போது குடிநீா்க் கட்டணம் உயா்த்தப்படவில்லை. குடிநீா் கட்டணத் திருத்தங்கள் செய்யப்படுமாயின், மாமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.