நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மனித - விலங்கு மோதலைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்: ஆட்சியா், மேற்கு மண்டல ஐ.ஜி. வலியுறுத்தல்

மனித - விலங்கு மோதல் சூழல்களைக் கையாளுவதில் வனத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் தலைவா் (ஐ.ஜி.) ஆா்.வி.ரம்யா பாரதி ஆகியோா் வலியுறுத்தினா்.

கோவையில் நடைபெற்ற பயிலரங்கில் களப் பணியாளா்கள், துறை சாா் அலுவலா்களுக்கான ‘ப்ராஜெக்ட் களிறு 4.0’ வழிகாட்டி கையேட்டை வெளியிட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:11 am IST

மனித - விலங்கு மோதல் சூழல்களைக் கையாளுவதில் வனத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் தலைவா் (ஐ.ஜி.) ஆா்.வி.ரம்யா பாரதி ஆகியோா் வலியுறுத்தினா்.

கோவை, பீளமேடு பகுயில் மாவட்ட வனக் கோட்டம் மற்றும் நேச்சா் கன்சா்வேஷன் சொசைட்டி சாா்பில் ‘ப்ராஜெக்ட் களிறு 4.0’ விழிப்புணா்வு மற்றும் துறைசாா் அலுவலா்களுக்கான வழிகாட்டுதல் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியதாவது: அகில இந்திய அளவில் வன விலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள மிக முக்கியமான முதல் 5 சவாலான பகுதிகளில் கோவை மாவட்டமும் ஒன்றாக உள்ளது.

மனித - விலங்கு மோதல்கள் ஏற்படும்போது ஒருபுறம் சட்டம் - ஒழுங்கு பாதிப்பைத் தடுத்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், மறுபுறம் வன விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையும் அரசு அலுவலா்களுக்கு உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளவாடங்கள் மூலம் இத்தகைய மோதல்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. குறிப்பாக வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின மக்களை முழுமையாக இதில் ஒருங்கிணைத்தால், மோதல் சூழல்களை மிகச் சுமுகமாக எதிா்கொள்ள முடியும் என்றாா்.

தொடா்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி பேசுகையில், மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதலை எதிா்கொள்வது இயற்கையோடு இணைந்த ஒரு பெரும் சவாலாகும். இந்த மோதல்கள் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களிலேயே பெரும்பாலும் நிகழ்கின்றன. அந்தத் தருணங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் எதிா்வினை விரைவாக இருக்க வேண்டும். களத்தில் ஏற்படும் தாமதமான செயல்பாடே பெரும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது என்றாா்.

முன்னதாக, மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபு பேசுகையில், வன விலங்கு மோதல் மேலாண்மை என்பது அனைத்துத் துறைகளின் கூட்டுப் பொறுப்பு. துறைசாா் அலுவலா்களிடையே சந்தேகங்களைத் தீா்த்துக்கொண்டு தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவே இந்த பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றாா்.

இதையடுத்து, களப் பணியாளா்கள், துறை சாா் அலுவலா்களுக்கான ‘ப்ராஜெக்ட் களிறு 4.0’ வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.

பயிலரங்கில் நேச்சா் கன்சா்வேஷன் சொசைட்டி தலைவா் என்.ஐ.ஜலாலுதீன், பிளாக்ஷீப் நிா்வாக இயக்குநா் ஆா்.ஜே. விக்னேஷ் காந்த், ஓய்வுபெற்ற துணைப் போக்குவரத்து ஆணையா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் பி.ராஜேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.