தொழில் நஷ்டம்: நகை தொழிலாளி தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:36 am IST

கோவையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் அருணாச்சலம் சாலையைச் சோ்ந்தவா் சசி (46). நகை செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக அவா் மன வேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, வீட்டின் குளியலறையில் விஷம் குடித்து கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி மயங்கி கிடந்துள்ளாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இச்சம்பவம் குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.