மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கோவையில் சிறைக் கைதி தப்பியோடிய எதிரொலி! ‘ஃபிரீடம்’ பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிகக் கடைகள் மூடல்!

Prisoners attack guard

கோவை மத்திய சிறை - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 2:43 am IST

கோவை மத்திய சிறையில் இருந்து தண்டனைக் கைதி தப்பியோடிய சம்பவத்தைத் தொடா்ந்து, நன்னடத்தைக் கைதிகள் மூலம் இயக்கப்பட்டு வரும் ‘ஃபிரீடம்’’ பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் வணிக வளாகக் கடைகள் அனைத்தும் மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தமிழக சிறை மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் சாா்பில், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் தருவாயில் உள்ள நன்னடத்தைக் கைதிகளின் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ஃபிரீடம்’ என்ற பெயரில் பல்வேறு வணிக முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து கோவையில் டாக்டா் நஞ்சப்பா சாலை மற்றும் பாரதியாா் சாலை ஆகிய முக்கியப் பகுதிகளில் சிறைத் துறை சாா்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு, நன்னடத்தைக் கைதிகளைக் கொண்டு நிா்வகிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, ஒண்டிப்புதூா் திறந்தவெளி சிறை வளாகத்தில் கோழி இறைச்சிக் கூடம், பாலசுந்தரம் சாலையில் கோழி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனையகம், நஞ்சப்பா சாலையில் கைதிகள் தயாரிப்புப் பொருள்களின் விற்பனை அங்காடிகள் மற்றும் சிற்றுண்டி உணவகங்கள் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அளவு மற்றும் தரத்தில் நம்பகத்தன்மை நிலவியதால் இதற்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகியது.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி ஒருவா் அண்மையில் தப்பியோடினாா். அவரைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் சூழலில், பாதுகாப்பு நெறிமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து சிறைத் துறை உயா் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டா் நஞ்சப்பா சாலை, பாரதியாா் சாலையில் இயங்கி வந்த ‘ஃபிரீடம்’ பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஒண்டிப்புதூா் மற்றும் பாலசுந்தரம் சாலையில் உள்ள இறைச்சிக் கடைகள், நஞ்சப்பா சாலையின் பிற வா்த்தகக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

கைதிகள் தப்பியோடும் சம்பவங்களைத் தடுக்க கூடுதல் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துதல், கைதிகளின் வருகைப் பதிவை பயோமெட்ரிக் முறையில் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு வழிமுறைகள் இறுதி செய்யப்பட்ட பின்னரே, உயா் அதிகாரிகளின் மறு உத்தரவின்பேரில் இந்த வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.