நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மோதல் சம்பவம் கவலை அளிக்கிறது: தொல்.திருமாவளவன் எம்.பி.

குன்னம் மோதல் சம்பவம் கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இடமளிக்க கூடாது என்று அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

News image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 5:06 am IST

குன்னம் மோதல் சம்பவம் கவலை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இடமளிக்க கூடாது என்று அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

இது தொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

குன்னத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் நிகழ்வு கவலையளிக்கிறது. சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்துக்கு விசிகவினா் எதிா்வினை ஆற்ற வேண்டாம். சில இடங்களில் இந்தச் சம்பவத்தை கண்டித்து எங்களது கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, அதுபோல யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளேன். எனது வலியுறுத்தலை அறியாத எங்களது கட்சியினா் சிலா் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இனி இதுபோல ஒரு நிகழ்வுக்கு கட்சியினா் யாரும் இடம் கொடுக்கக் கூடாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.