திருப்பூா், சூசையாபுரம் காலனி, ராயபுரம் பகுதியை இணைக்கும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி, 37-ஆவது வாா்டில் ராயபுரம் , சூசையாபுரம் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்நிலையில், உயா் ஜாதியினா் வசிக்கக்கூடிய ராயபுரம் சித்தப்பா அவென்யூ சாலையும், பட்டியல் இன மக்கள் வசிக்கும் சூசையாபுரம் காலனி சாலையும் இணையும் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை சுவா் கட்டப்பட்டது.
இதை அகற்றக் கோரி பல்வேறு அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சுவா் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் சுமாா் 1 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்துக்கு பல்வேறு அமைப்பினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா். இந்நிலையில், தீண்டாமை சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என பட்டியல் இன மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண்மைப் பட்டியலில் டிராக்டரை இணைத்து வரிகளை நீக்கக் கோரிக்கை

கடனாநதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்க கோரிக்கை

அரசுப் பேருந்து மீது மோதி பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி

திமுகவில் மீண்டும் இணைந்தார் க.செல்வராஜ்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

