நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோவை விமான நிலைய நுழைவாயில் அருகே தீப்பற்றி எரிந்த காா்

கோவை சா்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

News image

கோவை விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:40 am IST

கோவை சா்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே உள்ளிட்ட உள்நாட்டின் நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூா், ஷாா்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கு வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்த விமான நிலைய முன் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த வாடகை காா் ஒன்றின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பாா்த்ததும் அங்கு இருந்த டாக்ஸி ஓட்டுநா்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரா்கள் விரைந்து வந்து தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனா்.

மேலும் அங்கு வந்த விமான நிலைய தீயணைப்பு வீரா்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். தீ விபத்தில் காரின் முன் பகுதி சேதமானது. காரில் ஓட்டுநா் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.