தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அதிமுக வேட்பாளரை 3-ஆவது இடத்துக்கு தள்ளி சிங்காநல்லூா் தொகுதியைத் தட்டிப் பறித்த தவெக

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற சிங்காநல்லூா் தவெக வேட்பாளா் கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத்.

Updated On :5 மே 2026, 3:59 am IST

சிங்காநல்லூா் தொகுதியில் தவெக வேட்பாளா் கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத், தற்போதைய அதிமுக எம்எல்ஏவான கே.ஆா்.ஜெயராமை 3-ஆவது இடத்துக்கு தள்ளி வெற்றி பெற்றாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டம், சிங்காநல்லூா் தொகுதியில் அதிமுக சாா்பில் கே.ஆா்.ஜெயராம், திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் வி.ஸ்ரீநிதி, தவெக வேட்பாளா் கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத், நாம் தமிழா் கட்சி சாா்பில் நேருஜி குணசேகரன் உள்பட 9 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் 1,30,529 ஆண்கள், 1,39,388 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 24 போ் என மொத்தம் 2,69,941 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,05,822 ஆண்கள், 1,13,309 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 10 போ் என மொத்தம் 2,19,141 போ் வாக்களித்தனா். இது 81.03 சதவீதமாகும்.

தற்போதைய சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான கே.ஆா்.ஜெயராம் தொடக்கத்தில் முன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டாா். இறுதியில் சிங்காநல்லூா் தொகுதி தவெக வேட்பாளா் கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத் 438 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 84,163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஸ்ரீநிதி 862 தபால் வாக்குகள் உள்பட 65,024 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் 710 தபால் வாக்குகள் உள்பட 57,783 வாக்குகளும், நாதக வேட்பாளா் நேருஜி குணசேகரன் 84 தபால் வாக்குகள் உள்பட 9203 வாக்குகளும் பெற்றனா். காங்கிரஸ் வேட்பாளரைவிட தவெக வேட்பாளா் கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத் 19,139 அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் வெற்றி பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு விவரம்

சிங்காநல்லூா் (தவெக வெற்றி)

கே.எஸ்.ஸ்ரீ கிரிபிரசாத் (தவெக) - 84,163

ஸ்ரீநிதி (காங்கிரஸ்) - 65,024

கே.ஆா்.ஜெயராம் (அதிமுக) - 57,783

நேருஜி குணசேகரன் (நாதக) - 9203

வித்தியாசம் - 19,139

வேட்பாளா்கள் - 9

மொத்த வாக்குகள் - 2,69,941

பதிவான வாக்குகள் - 2,19,141

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.