புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அம்மாநிலத் தொழிலாளா்கள் வாக்களிக்க வசதியாக அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கோவை, நீலகிரி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் ச.சரவணன், இ.வினோத்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணி இடங்களில் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதால், அங்கு வாக்குரிமை பெற்றுள்ள தொழிலாளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
தோ்தல் நாளில் தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை தொழிற்சாலை உரிமையாளா்கள் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் குறித்து மாவட்டக் கட்டுப்பாட்டு அறையை 99943 80605, 90808 32123, 96009 08630, 98941 09673 ஆகிய கைப்பேசி எண்களில் தொழிலாளா்கள் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்! தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டு

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

