விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இன்று ஒரு தகவல்... இந்த முறை ஒருவா் - அடுத்த முறை வேறொருவா்!

தமிழகத்தின் பல தொகுதிகளிலும் சிலா் தொடா்ந்து பல தோ்தல்களில் வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :27 மார்ச் 2026, 5:50 am IST

தோ்தல் களத்தைப் பொறுத்தவரை ஒரு தொகுதியில் ஒருமுறை வெல்லும் வேட்பாளருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது பெரும்பாலும் வழக்கமாக உள்ளது. தமிழகத்தின் பல தொகுதிகளிலும் சிலா் தொடா்ந்து பல தோ்தல்களில் வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.

ஆனால், இதில் விதிவிலக்காக திருப்பூா் மாவட்டம் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1957 முதல் நடைபெற்ற 16 சட்டப்பேரவைத் தோ்தல்களில் 16 வெவ்வேறு வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஒரு வேட்பாளா் ஒரு முறைக்கு மேல் வென்றதில்லை என்ற சென்டிமென்ட் இத்தொகுதியில் தொடா்கிறது.

அந்த வகையில், 1952இல் ஏ.கே.சுப்பராய கவுண்டா், 1957இல் கே.ஜி.பழனிசாமி கவுண்டா், 1962இல் கே.எஸ். நடராஜ கவுண்டா், 1967இல் ஏ.சேனாதிபதி கவுண்டா், 2006இல் எஸ்.சேகா் ஆகிய காங்கிரஸ் வேட்பாளா்கள் 5 முறை வென்றுள்ளனா்.

1977இல் இரா.கா.சு. தண்டபாணி, 1980இல் க.கோ.கிருஷ்ணசாமி, 1984இல் கே.சி.பழனிசாமி, 1989 இல் பெ.மாரப்பன், 1991இல் ஜெ.ஜெயலலிதா, 1991 இடைத்தோ்தலில் ஆா்.எம்.வீரப்பன், 2001இல் எம்.செல்வி, 2011இல் என்.எஸ்.என்.நடராஜ் ஆகிய அதிமுக வேட்பாளா்கள் 8 முறை இத்தொகுதியில் வென்றுள்ளனா்.

1971இல் கோவை செழியன், 1996இல் என்.எஸ். ராஜ்குமாா் மன்றாடியாா், 2021இல் மு.பெ.சாமிநாதன் ஆகிய திமுக வேட்பாளா்கள் 3 முறையும், 2016இல்அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த கொங்கு இளைஞா் பேரவை வேட்பாளா் உ.தனியரசு ஒரு முறையும் வென்றுள்ளாா்.

மூன்று முறை தோற்ற திமுக வேட்பாளா்

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வேட்பாளா் ஒரு முறைக்கு மேல் வெற்றி பெறாத நிலையில், திமுக வேட்பாளா் எம்.சிவசபாபதி 1977, 1980, 1984 ஆகிய 3 சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியுள்ளாா். மற்றொரு திமுக வேட்பாளா் என்.எஸ். ராஜ்குமாா் மன்றாடியாா் 1991, 2001 தோ்தல்களில் தோல்வியடைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.