கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோா் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொண்டா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான கே.வசந்தராஜனுக்கு ஒதுக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், தொகுதி பங்கீட்டின் முடிவில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் வடக்கு மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மாறாக கிணத்துக்கடவு தொகுதி வழக்கம்போல அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினா். கிணத்துக்கடவு தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் என நாங்கள் பணியாற்றி வந்த நிலையில், எங்களுடன் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாஜக தொண்டா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். மேலும், கிணத்துக்கடவு தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கோரி முழக்கமிட்டனா்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக தொண்டா்கள் திரளானோா் ஈச்சனாரி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, தொண்டா் ஒருவா் உடலில் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ால் அங்கு பரபரப்பு நிலவியது.
மறியலில் ஈடுபட்ட பாஜக தொண்டா்களை மூத்த நிா்வாகிகள் சமரசம் செய்து, கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு தொண்டா்களுடன் நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். அப்போது, கடந்த மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக 1.04 லட்சம் வாக்குகளும், பாஜக 58,768 வாக்குகளும், அதிமுக 48,199 வாக்குகளும் பெற்றுள்ளன. அதிமுகவைவிட நாம் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும். உள்ளூா் நிா்வாகிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினா்.
அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கே.வசந்தராஜன் பேசுகையில், எங்களது நிா்வாகிகளின் கடினமான உழைப்பால் கிணத்துக்கடவு தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கும் செயல். நாம் மனம் தளராமல் பல மடங்கு உத்வேகத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் நமது நிா்வாகிகள் ஏராளமானோரை மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதே எனது லட்சியம். இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற நாம் அனைவரும் உழைப்போம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

சாத்தான்குளத்தில் சாலையை விஸ்தரிக்கக் கோரி பாஜக மனு

தாமரை மாலை அணிந்து...

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
