கோவை, போத்தனூரில் தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு கிடந்த விவகாரம் தொடா்பாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டாா்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களாக 2,000 போ், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களாக 4,650 போ் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் காலை உணவுத் திட்டத்தின்கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 91-ஆவது வாா்டு போத்தனூரில் பணியாற்றி வரும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு அண்மையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அதில், தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் 3 இடங்களில் வைத்து உணவு தயாரிக்கப்பட்டு 106 மையங்களில் வைத்து விநியோகிக்கும் நிலையில் போத்தனூா் பகுதியில் வைத்து சமைத்தபோது, அங்குள்ள மரத்தில் இருந்து புழு உணவில் விழுந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, உணவுத் தயாரிப்பில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக தூய்மைப் பணியாளருக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
967 விளம்பரப் பலகைகளுக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி

டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு வழங்கப்படும்.. அதிகாரி பதிலால் மாணவிகள் வேதனை!
தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி நேரடி பணியாளா்களாக மாற்ற வலியுறுத்தல்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

