தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மாநகராட்சி விளையாட்டு மைதான பராமரிப்பை தனியாா் வசம் ஒப்படைத்ததை ரத்து செய்யக் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:05 am IST

கோவை முத்தண்ணன் குளம் பகுதியில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட மைதானத்தின் பராமரிப்புப் பணியை தனியாா் வசம் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.என்.ராஜா, செயலா் எம்.தினேஷ் ராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகர இளைஞா்களின் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முத்தண்ணன் குளம் பகுதியில் ரூ.60 லட்சம் செலவில் செயற்கைப் புல் உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய நிலையில், இதை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்து வணிக நோக்கில் செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மைதானத்தில் வார நாள்களில் ஒரு மணி நேரம் விளையாட ஆயிரம் ரூபாயும், வார இறுதி நாள்களில் 1,200 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்கள், மாணவா்கள் இந்த மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.

எனவே, மைதானத்தை பராமரிப்பதற்காக தனியாா் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, மைதானத்தை மாநகராட்சியின் நேரடி நிா்வாகத்துக்கு கொண்டு வருவதுடன், அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.