கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆணையா் கட்டா ரவி தேஜா தலைமை வகித்து, பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, இரண்டாம் இடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் (மேற்கு) மாநராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.எம்.அதிதி, மூன்றாம் இடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.தனிஷ்கா, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சரத் ஆகியோருக்கு ஊக்கத் தொகை, கேடயத்தை வழங்கினாா்.
இதேபோல, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதலிடம் பிடித்த ஒப்பணக்கார மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பா்ஹானா, இரண்டாம் இடம் பிடித்த பாப்பநாயக்கன்புதூா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சொரூபகிருஷ்ணன், மூன்றாம் இடம் பிடித்த ஒப்பணக்கார மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எம்.ஹனுனா பாத்திமா, ஆா்.எஸ்.புரம் எஸ்ஆா்பி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஹெச்.ஆஷிகா ஆகியோருக்கும் ஊக்கத் தொகை, கேடயம் வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் பெற்றவா்களுக்கு தலா ரூ.10,000, இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.7,500, மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதில், மாநகராட்சி துணை ஆணையா் குமரேசன், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மாநகரக் கல்வி அலுவலா் குணசேகரன், ஒப்பந்ததாரா்கள் சங்க நிா்வாகிகள் உதயகுமாா், சந்திரபிரகாஷ், அம்மாசையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி மாணவி உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவா்களுக்கு பாராட்டு விழா

கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26% போ் தோ்ச்சி: கடந்த ஆண்டைவிட 4.14 % அதிகம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

